Categories
மாநில செய்திகள்

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு தேதி – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்  நவம்பர் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.  தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து கல்வி நிலையங்கள் திறப்பதற்கான முன் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக இது டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |