கோதுமை ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – அரை கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – அரை கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் பச்சைமிளகாய், கொத்தமல்லியை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் எடுத்து தண்ணீர் ஊற்றி தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு நன்கு ஊறியபின் கடலைபருப்பை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், கோதுமை ரவை சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைத்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்து நன்கு புளிக்க வைக்கவும்.
இட்லி குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சூடாகப் பரிமாறினால் ருசியான கோதுமை ரவா இட்லி ரெடி.