Categories
தேசிய செய்திகள்

வறுமையில் வாடிய உணவக உரிமையாளர்… இணையத்தில் திரண்ட பணம்… மோசடி செய்த யூடியூப் உரிமையாளர்…!!!

டெல்லியில் உணவக உரிமையாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி யூடியூப் உரிமையாளர் சமூக வலைத்தளம் மூலமாக பணம் திரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மால்வியா நகரில் காந்தா பிரசாந்த் என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா பொது முடக்கத்தால், தனது தொழில் முடங்கியதாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் உணவகத்தை நடத்துவதற்கு மிகவும் அவதிப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அந்த வீடியோவை யூடியூப் நடத்திக்கொண்டிருக்கும் கௌரவ் வாசன் என்ற நபர் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் கந்தா பிரசாந்த் மற்றும் அவரின் மனைவிக்கு பொதுமக்கள் உதவி செய்யும்படி யூடியூப் உரிமையாளர் பதிவு செய்துள்ளார்.

அது மட்டுமன்றி தனது வங்கிக் கணக்கு விவரங்களை அத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட பலர் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி உதவியுள்ளனர். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி திரண்ட நிதியை யூடியூப் உரிமையாளர் முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி மால்வியா நகர் காவல் நிலையத்தில் கந்தா பிரசாந்த் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் தன் மீதான குற்றத்தை யூடியூப் உரிமையாளர் மறுத்துள்ளார். கந்தா பிரசாந்தை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை நான் விரும்பவில்லை. அதனால் எனது வங்கி விவரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நிதி திரட்டினேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |