வங்கிக்கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை நவம்பர் 5ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்கும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசிடமிருந்து நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.