கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஆர்ஆர்நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவின் சேர்ந்தால் முனி ரத்னா மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறுவதாக கூறியதால் அவர் காங்கிரசில் இருந்து விலகி சென்றார்.
அதன்படி அவரை வெற்றி பெற வைக்கவும், அவருக்கு பதவி மற்றும் அதிகாரம் வழங்குவதற்கு ஆர்ஆர்நகர் தொகுதியில் உள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் முதல்-மந்திரி எடியூரப்பா பலி கொடுத்து வருகிறார். எந்த ஒரு சூழலிலும் காங்கிரஸ் கட்சி ஜாதி அரசியல் செய்வதில்லை. எடியூரப்பா ஒரு போதும் சாதி அரசியல் செய்ததில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். தற்போது காங்கிரஸ் கட்சி ஜாதி அரசியலில் ஈடுபட்டு வருவதாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப எடியூரப்பா கருதுகிறார். ஜாதி அரசியலில் ஈடுபடுவது யார் என்ற மக்களே தீர்மானியுங்கள். வரப்போகும் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.