Categories
சினிமா தமிழ் சினிமா

கைவிட்ட தமிழ் சினிமா…. தாங்கி பிடிக்கும் படவாய்ப்பு…. கலக்கும் அருவிப்பட நடிகை …!!

தமிழ் திரை உலகில் வித்தியாசமான படங்களில் நடித்த அதிதி பாலன் பிரபல நடிகருடன் கை கோர்க்கிறார்.

 

அதிதி பாலன் அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகம் ஆனார். இந்த படம் வித்தியாசமான கதைகளம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படம் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பு பெற்று வந்தாலும்,  தமிழ் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் மலையாள திரை உலகம் அவருக்கு வாய்ப்பை தந்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் படவேட்டு என்கிற படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டு, விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் அடுத்து  பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் ‘கோல்ட் கேஸ்’ என்கிற படத்தில் நடிகையாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் படிப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.  சில வாரத்துக்கு முன் பிரித்விராஜ்க்கு கொரனா அறிகுறி மூலம் தனிமை படுத்த பட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவரும், அதிதி பாலனும், கலந்து கொள்வார்கள் தெரியவருகிறது.

 

 

Categories

Tech |