தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் இருக்கின்ற நிலையில் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இரு துறைகளையும் அமைச்சர்களும் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது, மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.