Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆறே பொருள்களை வைத்து… இந்த ரெசிபிய செய்து விடலாம்..!!

தேங்காய் லட்டு செய்ய தேவையானப் பொருட்கள்:

தேங்காய்                                   – 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க்          – 2 கப்
சீனி                                               – 1 கப்
ஏலக்காய் பொடி                     – 1 டீஸ்பூன்
பாதாம்                                        – 1 கைப்பிடி
வெண்ணெய்                            – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு அவ்வப்போது லேசாக கிளறி விடவும்.

பின்னர் கொதிக்க வைத்த பாலில், துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கிளறி விட்டு அடுப்பில் 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும்.

அதனுடன் சீனியை சேர்த்து நன்கு கரைந்தவுடன், கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

பின்பு கையில் வெண்ணெய் தடவி, அதனை சிறிய லட்டுகளாக பிடித்து வைத்து கொள்ளவும். அதனை அடுத்து பிடித்து வைத்த லட்டுகளின் மீது பாதாம் வைத்து பரிமாறினால் சுவையான தேங்காய் லட்டு ரெடி.

Categories

Tech |