கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பீச் பல மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் அங்கு திரண்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து பீச்களுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பணம்பூர் பீச் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக கடல் காற்றை சுவாசிக்க அமலில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் பீச்சில் திரண்டனர்.
இது குறித்து அங்கு வந்திருந்த சுற்றுலா வாசி ஒருவர் கூறுகையில், ” வருங்காலத்திலும் கொரோனா பாதிப்பு நிறுத்த முடியாது. ஆனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நாங்கள் அனைவரும் இன்று பீச்சுக்கு வந்திருக்கிறோம். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது நல்லதல்ல. அதனால் மன அழுத்தம் தான் ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.