பிரெட் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – தேவையான அளவு சமையல் சோடா – 1 சிட்டிகை
செய்முறை :
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம், சமையல் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். அதனை அடுத்து பிரட் துண்டுகளை சதுரமாக, சிறிய அளவுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும், பிரட் துண்டைகளை எடுத்து, கலக்கி வைத்துள்ள மாவில் நனைத்து, அதனை சூடான எண்ணெயில் பொரித்து இரு புறமும் வேகவைத்து எடுத்து பரிமாறினால் சுவையான பிரெட் பஜ்ஜி ரெடி.