Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… கட்டாயம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |