Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க. அரசின் நடப்பாண்டு விளம்பர செலவு ரூ.713 கோடி ….!!

மத்திய பாஜக அரசு இந்த ஓராண்டில் மட்டும் விளம்பரத்திற்காக 713 கோடி ரூபாய் செலவிட்டுருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஜெத்தன் தேசாய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 2019-20 ஆம் ஆண்டில் விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நடப்பாண்டில் மத்திய அரசு விளம்பரத்திற்காக 713 கோடியே 20 லட்சம் ரூபாயை செலவிட்டு உள்ளதாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 1.95 லட்சம் ரூபாயை செலவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் 295 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களும், 317 கோடி ரூபாய் மின்னணு ஊடகம் விளம்பரங்களுக்கும், 101 கோடி ரூபாய் போஸ்ட்டார், பேனர் உள்ளிட்ட திறந்தவெளி விளம்பரங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |