துலாம் ராசி அன்பர்களே..! இன்று நிதானத்தோடு செயல்பட்டு கொள்ள வேண்டும்.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் கொஞ்சம் எச்சரிக்கையாக தான் நடந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்ய வேண்டும்.பணப்பற்றாக்குறையை சமாளித்து உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்தவர்களின் குறைகளைப் போக்க முயற்சி செய்வீர்கள். இருந்தாலும் பொறுமையாக இருங்கள்.பயணங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
தன ரீதியில் சில பிரச்சனைகள் வரக்கூடும். தடைகளை தாண்டிதான் முன்னேறி செல்ல வேண்டியிருக்கும். தேவையில்லாத மன குழப்பம் இருக்கும். எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கடுமையான உழைப்பு தேவைப்படும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி இருக்கும் பிரச்சனை ஏதுமில்லை. பணவரவு கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும்.அதேபோல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்ற சிறு குழப்பம் இருக்கும்.மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து எதுவும் போடக்கூடாது. வாக்குறுதிகளும் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.
பணம் நான் பெற்று தருகிறேன் என்று எந்தவித செயலையும் செய்யக்கூடாது. இதை மட்டும் நீங்கள் கடைப்பிடியுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். இன்று மிக முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியதுமாலை நேரத்தில் வெண்கடுகு மற்றும் சாம்பிராணி கலந்து தீபம் போடுங்கள். இப்படி செய்தால் சில பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இந்த தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். பிரச்சனைகளும் சரியாகும்.
மனமும் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியுங்கள் கருநீல நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவபெருமான் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் கருநீல நிறம்.