மு.க.ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் நக்கீரன் பத்திரிக்கை மற்றும் கலைஞர் டிவிக்கு எதிராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்து மானநஷ்ட வழக்கு ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மானநஷ்டம் கோரி மு.க.ஸ்டாலின், சபரீசன், நக்கீரன் பத்திரிக்கை மற்றும் கலைஞர்-டிவிக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எதிர் மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.