நடிகை காஜல் அகர்வால் வெளிநாட்டு ஹனிமூன் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன.
பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதமை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் டிரென்ட் ஆகியது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவை வெளிநாடுகளில் கொண்டாட திட்டமிட்டு இருந்த காஜல்அகர்வால் தற்போது அதனை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.
காஜல் அகர்வால் தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் -2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சாரியா என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா பேரிடரால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிரஞ்சீவியின் ஆச்சாரியா பட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
இதில் காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருக்கின்றன. இதை நடித்து முழுமையாக முடித்து விட்டு ஹனிமூன் செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதால் தற்போது வெளிநாட்டு ஹனிமூன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஹனிமூன் காஜல் அகர்வால் தள்ளி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.