Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்..! பாராட்டு அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! என்று சிவபெருமான் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இன்று ஒரு முறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்ய வேண்டியிருக்கும். நாணயத்தை ஓரளவு காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து வருமானம் கூடுதலாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும்.அரசியல் தொழிலை சார்ந்தவர்களுக்கும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். திடீர் செலவு அதிகரிக்கும். உங்களின் திறமை வெளிப்படும்.

பாராட்டும் ஓரளவு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பணம் விஷயத்தில் மீனம் ராசிக்காரர்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டும். யாரையும் நம்பி பணம் பொறுப்பை விட்டு கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் கண்டிப்பாக ஈடுபட வேண்டாம். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு. ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் பிரச்சனை ஏதுமில்லை. குடும்பத்திலும் கலகலப்பான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை. உணவில் மட்டும் கட்டுப்பாடு இருந்தால் நல்லது.

கடன் பிரச்சனைகள் சரியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.மாணவர்கள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

விளையாடும் பொழுது கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும்.இன்று நீங்கள் மிக முக்கியமாகச் செய்யவேண்டியது மாலை நேரத்தில் வென்கடுகு மட்டும் சாம்பிராணி தூபம் போட்டு வர வேண்டும். இதில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் செல்வம் அதிகரிக்கும்.இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியுங்கள் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் மற்றும் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால்  செய்யும் காரியங்கள் நல்லதில் முடியும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |