சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று பெருமைகள் வந்துச்சேர இறைவழிபாடு என்பது கண்டிப்பாக தேவை. மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சொத்துக்களின் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வார்த்தைகளில் மட்டும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை இல்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையின் நலனிலும் குடும்பத்தினரின் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்.
இன்று யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் பண விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு உதவிச் செய்யும் பொழுதும் எச்சரிக்கை வேண்டும். சமூக அக்கறையுடன் இன்று நீங்கள் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்.
பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். மாணவ மாணவியர்கள் கல்விக்காக உழைக்க வேண்டியதிருக்கும். மேற்கல்வி காணும் முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று மாலை நேரத்தில் வீடு முழுவதும் வெண்கடுகு சாம்பிராணி போட்டு தூபம் காட்டுங்கள், மகாலட்சுமி குடிக்கொள்வாள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமானும் வழிபாட்டை மேற்கொண்டு, முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.