கன்னி ராசி அன்பர்களே..!
இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணவேண்டிய நாளாக இருக்கும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியாகவே இருக்கும்.
மதியத்திற்குமேல் மனஅமைதி கூடும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று விளையாடும் பொழுது எச்சரிக்கை தேவை. துன்பங்கள் படிப்படியாக குறையும். மனதில் தன்னம்பிக்கை கூடும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பங்கள் இருந்துக்கொண்டே இருக்கும்.
செய்யும் முயற்சியில் தடங்கல்கள் அவ்வப்போது வந்துச்செல்லும். இன்று நீங்கள் நிதானத்துடன் எதையும் அழுகினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு செயல்களை மேற்கொண்டால் வெற்றிப்பெறலாம். கணவன் மனைவி இருவருமே வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்துக் கொள்ளுங்கள். பேசும்பொழுது அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். கோபமில்லாமல் நடந்துக் கொண்டாள் மானமும் மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் செயலும் நல்லபடியாக நடந்து முடியும்.
காதலில் உள்ளவர்கள் இன்று நிதானமான போக்கையே கடைப்பிடியுங்கள். பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். இன்று தொழில் சீராக இருக்கும். தனவரவும் சீராக தான் வந்துச்சேரும். இன்று உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டியது மாலை நேரம் இல்லத்தில் வென்கடுகு தூபம் போடுவதால் மகாலட்சுமி குடிக்கொள்வாள்.
இதனால் உங்களுக்கு செல்வமும் வந்துச்சேரும். இன்று முக்கியமான செயல்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.