Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருந்தபோது அக்கறை இல்லை… என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு… சிரக் பஸ்வான்…!!!

இறந்து போன என் தந்தை வைத்து அனைவரும் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக சிரக் பஸ்வான் கூறியுள்ளார்.

மத்திய உணவுத்துறை மந்திரியான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் இறப்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று, பிரதமருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து சிரக் பஸ்வன் கூறுகையில், “ஒரு மகனைப் பற்றி இது போன்ற விஷயங்களை பேசுபவர்கள் அனைவரும் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்.

அலைபேசியில் என் தந்தையின் உடல்நிலை பற்றி மஞ்சி அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் அவர் என் தந்தையை பார்க்க வரவில்லை. தற்போது என் தந்தையைப் பற்றி அக்கரையாக இருப்பது போன்று பேசுகிறார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது இங்கே நான் அவரைப் பற்றி இவ்வளவு அக்கறை காட்டவில்லை?. அனைவரும் உயிரிழந்த என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர் உயிருடன் இருந்தபோது யாரும் அவரைப் பற்றி ஏன் கவலைப்படவில்லை?” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |