புதுச்சேரியில் வாழ்க்கையை வெறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் தலையில் தடவும் ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை முருகம்பக்கம் நாடார் வீதியில் பாலமுருகன் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் இருக்கின்ற மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் பத்தாம் தேதி திடீரென சுதா மாயமானார். அதன்பிறகு கடந்த 30 ஆம் தேதி வீடு திரும்பிய அவரை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நண்பன் சதீஷ் குமார் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்நிலையில் வாழ்க்கையே வெறுத்துப் போன சுதா தனது வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்து தலையில் தடவவும் ஹேர்டையை எடுத்து முடித்துள்ளார். அதன்பிறகு மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.