Categories
உலக செய்திகள்

இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்….! பின்னடைவை சந்தித்த டிரம்ப்… வெளியான அதிர்ச்சி முடிவுகள் ….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் என்.பி.டி  மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் ட்ரம்புக்கு 42 சதவீத ஆதரவும்  கிடைத்துள்ளது. ஹரிசேனா, அயோவா, ஜோர்ஜியா, மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த 12 மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிக்கிறார். அக்டோபர் 29 மற்றும் 31 இல் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் சரியாக தொற்றுநோயை கையாளவில்லை என்று 57 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |