அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும்.
ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு சென்று விடலாம். அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிக்காக நன்றி தெரிவிக்கவே உங்களை சந்திக்க இங்கு வந்தேன்” எனக் கூறினார். அயோத்தி நில பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.