சமையல் செய்யும் போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே குள்ளனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதான இவர் கணவருடன் விவாகரத்து ஆனதால் தனது தந்தை சின்னச்சாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவா சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராமல் அவருடைய சேலையில் நெருப்பு பற்றியது.
பின்னர் அவரது உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜீவாவை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ உடல் முழுவதும் பரவியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.