கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது கட்டை விரலை கடித்து காயப்படுத்திய மனைவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
அகமதாபாத்தில் உள்ள நரோடாவை சேர்ந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த நபர் தனது மனைவி பிரியங்காவிடம் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாய் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
அதோடு அவரது கட்டை விரலை கடித்து ரத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளார். மேலும் சமயலறையில் இருந்த பாத்திரங்களால் மறுபடியும் தாக்க கணவர் உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு நரோடா காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்துள்ளார்.