தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப் படுவது முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது பற்றி வெளியான தகவலில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் 45 பேர் மீட்கப்பட்டு 85 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி வேலைவாய்ப்பில் முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், முன்னுரிமை மதிப்பேன் பூஜ்ஜியம் என இருந்தது, முழு மதிப்பெண் தான 5 ஆக திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய நபர்களின் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் மூலமாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.