Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்ட தேர்தல் – 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

243 சட்டபேரவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக-யுடன் கூட்டணி வைத்துள்ளது. முக்கிய எதிர் கட்சியான திரு. தேஜாஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் இன்று 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைநகர் பாட்னாவில் காலை முதலே முதியவர்களும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும் முகக்கவசம் அணிந்தும்  தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல்களில்  பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 10-ம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

Categories

Tech |