இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,67,000 கடந்து உள்ள நிலையில் 76,0000 அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,310 பேருக்கு புதிதாக கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,67,623-ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,41,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 76,03,121 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 1,23 97-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.