Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீர் பள்ளம்!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி மகாத்மா காந்தி சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன்நகர்யில் மகாத்மா காந்தி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேலும் இச்சாலையை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30 அடி நீளம் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |