Categories
கோயம்புத்தூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலியோடு வாழனும்… அடம்பிடித்த காதலன்….. பின்னர் செய்த செயலால் ஷாக் ஆன தந்தை …!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது  இளம்பெண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது.

நெல்லை: ஆபாசபடம் பார்த்த இளைஞரை மிரட்டும் நபர்! காவலர் பிடியில்! - தினசரி  தமிழ்

ஆனால் பெண்ணின் தந்தை இதற்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும்போது காதலிக்குத் தெரியாமல் எடுத்த ஆபாச புகைப்படத்தை காதலியின் தந்தையின் செல்போனுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்கும்படி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குனியமுத்தூர் காவல் துறையினர் தூத்துக்குடியில் இருக்கும் தேவேஷ்வரிடம் விசாரணை மேற்கொண்டு பெண்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |