இன்றைய பஞ்சாங்கம்
04-11-2020, ஐப்பசி 19, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.50 வரை பின்பு திருவாதிரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் – 04.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியில் நெருக்கடிகள் உண்டாகும். வீட்டில் சிறுசிறு பிரச்சினைகளால் நிம்மதி கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் போட்டி பொறாமை நீங்கும். நண்பர்களின் உதவி கரம் நீட்டுவார்கள்.
ரிஷபம்
உங்கள் இராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்களின் வழியாக நல்ல செய்திகள் வீட்டுக்கு வந்து சேரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.தொழில் செய்பவர்களுக்கு அவர்கள் பதவிக்கு ஏற்ப உயர் பதவி கிடைக்கும். தொழிலில் பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். வருமானம் கூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். எந்த செயல் செய்தாலும் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் லாபம் இல்லாவிடிலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவி செய்த பிரச்சனைகள் நீக்குவார். விட்டுக்கொடுத்து செல்வது நல்லதை கொடுக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வருகையால் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள்.உத்தியோகத்தில் பொறுப்புடன் இருந்தால் உத்தியோகம் உயரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் அனுகூல பலன் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் வந்துசேரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சுபகாரியங்களை நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் வெளிப் பயணங்கள் அனுகூலத்தை கொடுக்கும். கடன் தொல்லை தீரும். வருமானம் மேலோங்கும். வீட்டில் அமைதி பெருகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகும். எதிலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். கைக்கு வர வேண்டிய தொகை காலதாமதம் அடையும். மதியம் 3. 43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு மதியம் 3. 43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் மந்தநிலை உருவாகும். வீட்டில் வீண் செலவுகள் உருவாகும்.தொழில் செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது.
தனுசு
உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் புது பொலிவுடன் தெம்புடன் இருப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனை பிரச்சனையை தீர்வு தரும்.தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் அமைய வாய்ப்பு கூடும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது. குழந்தைகளால் வீட்டில் அமைதி குறையும். ஆடம்பரப் பொருட்களை வாங்க செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியில் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.சுபகாரிய விஷயங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது.
கும்பம்
உங்களின் தாசிக்கு உடல் நிலையில் சோர்வு மனக்குழப்பம் அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும்.புதிய பரிதியில் எடுக்கும் முயற்சி ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுக்கவேண்டும். தொழிலில் வேலைப்பளு குறையும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.குழந்தைகள் வழியில் சுப செலவு உண்டாகும். வீட்டிலிருந்த மனக்கஷ்டங்கள் மறையும்.உடனிருப்பவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.