வளைகுடா பிராந்தியத்தில் இருக்கின்ற சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தற்போது வரை நீக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் எவரும் நுழைவதற்கான கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கி கொண்டிருக்கிறோம்.
ஆனால் வளைகுடா பிராந்தியத்தில் இருக்கின்ற சில நாடுகள் தற்போது வரை இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை. அந்த நாடுகள் அனைத்தும் பயணிகள் வருவதற்கான கட்டுப்பாடுகளை மிக எளிதாக்கினால் அதிக பயணிகளுடன் பறப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.