Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்துசென்ற தொழிலாளியை மிதித்துக்கொன்ற யானை …!!

நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று நாட்களில் இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட குய்ச் கிராமத்தில் வசிப்பவர் பாலுசாமி கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் அவர் நேற்று இரவு தனது கிராமத்திற்கு நடந்து சென்றபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது. மூன்று நாட்களில் இரண்டு பேர் காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் மலை கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |