துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுமி 91 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் மேற்கு பகுதியில் இருக்கின்ற இஸ்மிர் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தால் நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அது அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.