Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கல்லறை திருநாள் கொண்டாட்டம்” கடைக்கு சென்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே கந்தர்வகோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 45 வயதான இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி . இத்தம்பதிக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என இரண்டு  மகன்களும் அனுஷ்யா என்ற மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் மற்றும் செல்வி இருவரும் நேற்று கல்லறை திருநாளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டை மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ஜீவன் ஜோதி கார்மல் என்ற பகுதியில் வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து வந்து  கொண்டிருந்த கார் எதிர்பாராமல் பன்னீர்செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன் மனைவி இருவரும் கீழேவிழுந்து   படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த செல்வியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வியும்  பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது  உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

Categories

Tech |