Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வினவியுள்ளது.

ராஜீவ்காந்தி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திரு. நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ராஜிவ் வழக்கு விசாரணை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தினர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Categories

Tech |