Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டியிந்த வீடு…. துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்…. காவல்துறையினருக்கு அதிர்ச்சி…!!

தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்த  பிணம் பெரும்   பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டுக்குள் சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் பிணம் இருந்தது. உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. மேலும் மிகவும் உருக்குலைந்து இருந்ததால் ஆணா? பெண்ணா? என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பிணத்தை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு மிகவும் உருக்குலைந்து காணப்பட்டது எனவே சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இறந்தது ஆண் என தெரிய வந்தது.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீட்டை தூத்துக்குடியை சேர்ந்த முத்து மற்றும் மதுரையை சேர்ந்த சங்கர் ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததாக தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர் கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் வீடு பூட்டி இருந்தது. அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த முத்துவையும் சங்கரையும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வீடு பூட்டியிருந்ததால் பிணம் அத்தனைநாட்கள் அங்கு இருந்தது தெரியவந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தவர் யார் என்று அறிய முடியவில்லை. இறந்தவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த முத்து ஷங்கர் ஆகியோரை தேடி அவர்களின் சொந்த ஊருக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

Categories

Tech |