மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. நாதஸ்வர கலைஞரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவர் வீடு இருந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பழுதடைந்து இருந்த அவர் வீட்டின் சுவர் தூங்கி கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்தது. ஆனால் இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தெரியவரவில்லை.
இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு நோக்கியாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.