பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் மீண்டும் அம்மாநில முதலமைச்சர் ஆக முடியாது என லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மறைந்த மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான திரு. சிராக் பாஸ்வான் பீகார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலில் காகரிய மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் திரு. நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சர் ஆக மீண்டும் பதவியேற்க என்றும் அவரை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது இந்தச் சூழலில் மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜன சக்தி கட்சி பீகார் தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சிக்கு எதிராக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.