Categories
மாநில செய்திகள்

மூன்று மாதங்களில்… 30,000 இரட்டைப் பதிவுகள் நீக்கம்… வாக்காளர் பட்டியல் பற்றிய விவரம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது பற்றி அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30,000 இரட்டைப் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குவது பற்றி நவம்பர் 21,22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய நான்கு நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |