Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! கவனம் தேவை..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று ஆனந்த வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளையின் நலனில் அக்கறை வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கவனமாக பேசி பழக வேண்டும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும்.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்பொழுது கவனமாக இருங்கள். விளையாடும் பொழுதும் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தாரிடம் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு பிரச்சனையையும் பேசித்தீர்க்க வேண்டும்.

காதலில் உள்ளவர்களும் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டையும், பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் நல்லபடியாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: அடர்நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |