Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

“பாணி புயலால் தமிழகத்திற்கு பிரச்சனை இல்லை “வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட திடீர் தகவல்!!…

வங்ககடலில் உருவாகியுள்ள  பானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பாணி புயல் தோன்றியது .முதலில் இந்த புயலால் தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.இந்நிலையில்,சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புயல் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்  அவர் கூறியதாவது,வங்ககடலில் உருவாகியுள்ள பானி புயல் 1050 கிலோ மீட்டர் தொலைவில் சுழன்று கொண்டு இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புயலானது, வடதமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்புகள் இல்லை ,ஆகையால் இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |