தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதன் அழகை ரசிக்க சந்தோஷத்துடன் குளித்து மகிழ வருடந்தோறும் வந்து கொண்டே இருப்பார்கள் தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வரக்கூடிய சுற்றுலாத்தளமாக குற்றாலம் இருந்து வருகிறது இதனால் ஏராளமானோர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காணப்படும் ஆனால் இந்த வருடம் முதல் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை விதித்தால் தற்பொழுது பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலாத் தலமாகவும் சுகாதாரமான சுற்றுலாத் தலமாகவும் குற்றாலம் மாறி வருகிறது என்று அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்