Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் தகாத உறவு…. கண்டித்த கணவன்….. மிரட்டிய காதலன்…. பின் நடந்த சோகம்….!!

கள்ளக்காதலன் தன்னுடன் வர கூறி வீடியோ எடுத்து மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தளவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவண்ணா-குமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினேஷ்க்கும் திருமணம் முடிந்து ஆறு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர்களது விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர்.

தினேஷை சந்திக்கக்கூடாது என்று குமாரிக்கு அவரது குடும்பத்தினர் உறுதியாக தெரிவித்தனர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் தாளவாடியில் இருக்கும் வாடகை வீட்டில் குமாரி மற்றும் சிவண்ணா வசித்து வந்தனர். கணவருடன் குமாரி குடும்பம் நடத்துவதை தெரிந்து கொண்டார் தினேஷ். இதனால் குமாரியை தன்னுடன் வந்து விடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.

ஒருவேளை குமாரி தன்னுடன் வரவில்லை என்றால் அவருடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த குமாரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த குமாரியின் பெற்றோர் தங்கள் மகளின் சாவிற்கு தினேஷ் தான் காரணம் என போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்

Categories

Tech |