Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும வறட்சியை… சரி செய்ய… சில டிப்ஸ்…!!

அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

சருமானது, பொதுவாக குளிர் நேரத்தில் வறண்டு, வெடிப்புகள் அதிகமாகி, தோல் காய்ந்து போய் அதிக தொல்லை கொடுக்கும் என்பதால் அதை போக்க  தரமான சோப்பு, ஃபேஷ் வாஷ், பாடி லோஷன் போன்ற ரசாயன கலவையால் செய்யப்படட பொருள்களையே அதிகம் பயன்படுத்திக் கொண்டே இருப்பதால் அதிக செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.

வீட்டில் சமயலறையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே  நாம் எளிதாகக் சருமத்தில் உள்ள வெடிப்புகளை நிக்கி, ஈரபத்தை தக்க வைத்து கொள்ளலாம். சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்க வழிமுறைகள் இருக்கின்றது.

எண்ணெய் பேக்:

எண்ணெய் என்றால் உடம்பிற்கு வலு சேர்பத்துடன், சுத்தப்படுத்தும் தன்மைகளை  கொண்டது. குளிர் நேரங்களில் விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய்களை  உபயோகப்படுத்துவதால் வறண்டு போன சருமத்திற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். பாத்திரத்தில் 3 டிஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஊற்றி, அதனுடன் 1 டிஸ்பூன் விளக்கெண்ணெயை நன்கு கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். அதன் பிறகு 10 நிமிடம் ஊற வைத்து  சுடுநீரில் நனைத்து பிழிந்த சுடான டவல் கொண்டு நன்றாகத் துடைத்து எண்ணெயை நீக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் மிருதுவாகும்.

தேன் பேக்:

வறண்ட சருமத்திற்கு தேன் புத்துணர்ச்சியை கொடுக்கும். பாத்திரத்தில் தேனை ஊற்றி, அதனுடன் ஆரஞ்சுச் சாற்றையும் நன்கு கலந்து வறண்ட சரும பகுதியில் தேய்த்து கொள்ளவும். அதனையடுத்து 10 நிமிடம் ஊறவைத்து, பின் தண்ணீரால் தேய்த்த பகுதியில் நன்கு  கழுவினால் சரும சுருக்கங்களை நீங்கி பலபலபாக பளிச்சிடும்.

முட்டை பேக்:

முட்டையானது, உடல் ஆரோக்கியத்தை தருவதுடன், புரதச்சத்து மிகுந்த உணவாகவும் கருதப்படுகிறது. இது சருமத்தை மிகவும் பாதுகாக்க உதவுகிறது. பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுச் சாறு, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் தேன், சிறிது ரோஸ் வாட்டர், சில துளிகள் எலுமிச்சைச் சாறு  சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த  கலவையை தினமும் காலையில்  குளிப்பதற்கு முன் சருமத்தில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து, அதன் பின்பு  தேய்த்த இடத்தை தண்ணீரால் நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.இது சருமத்தை மிருதுவாக வைக்கும்.

Categories

Tech |