Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தேர்தலில்….. ”ஜோ பைடன் 91, டிரம்ப் 73”…. வெளியாகும் தேர்தல் முடிவுகள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 91 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சார்ந்த டொனால்ட் டிரம்ப் 73 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 538 தேர்தல் வாக்குகள் இருக்கின்றன. இதில் 270 வாக்குகளை பெறுபவர் அதிபராக அறிவிக்கப்படுவார்.

ஏற்கனவே எந்தெந்த மாநிலங்களில் யார் அதிக செல்வாக்கு பெற்று இருக்கிறார்களோ, அவர்களுக்கே வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முக்கியமான மாநிலங்களில் மாற்றம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு நெடுக பெரும்பாலும் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்து இருக்கக்கூடிய டெக்ஸாஸ் மாநிலத்தில் தற்போது ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். அந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.

தற்போதைய சூழலில் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனாலும்கூட முழுமையான 38 வாக்குகளும் அவருக்கு சென்று விட்டது என்று அறிவிக்கப்படவில்லை. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மற்றொரு முக்கியமான மாநிலமான புளோரிடா, இது ஒரு பேட்டில் கிரவுண்ட் ஸ்டேட் ஆகும். அந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அந்த மாநிலத்தில் 29 தேர்தல் சபை வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் டிரம்ப்புக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில்  முன்னிலையில் இருக்கிறார். பென்சில்வேனியா என்று சொல்லக்கூடிய மற்றொரு பேட்டில் கிரவுண்ட் மாநிலத்தில் தற்போது ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார்.

Categories

Tech |