Categories
தேசிய செய்திகள்

நேற்று நடந்த இடைத் தேர்தல்… மர்ம நபர் துப்பாக்கி சூடு… வாக்கு சாவடியில் பரபரப்பு…!!!

நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்றன 54 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 54 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இடைத்தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில் மத்திய பிரதேசத்தில் மெரினா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் படுகாயமடைந்தார். அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணியளவில் ஓட்டுப்பதிவு முடிந்தது. அந்த வாக்குப்பதிவில் நாகலாந்தில் 88.10 சதவீதமும், தெலுங்கானாவில் 82.60 சதவீதமும், சத்தீஷ்காரில் 71.99 சதவீதமும், ஹரியானா மற்றும் ஒரிசாவில் 68 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 67%, ஜார்கண்டில் 62 சதவீதம், குஜராத்தில் 58 சதவீதம், கர்நாடகாவில் 51 சதவீதம், உத்தரபிரதேச மாநிலத்தில் 52 சதவீதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

Categories

Tech |