Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வர்த்தகம் மிகவும் குறைவு… வீழ்ச்சியை சந்திக்கும் இந்தியா… மத்திய வர்த்தகம் தகவல்…!!!

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5.4 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள் மற்றும் தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைப் போலவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் இந்தியாவின் ஏற்றுமதி 15007 கோடி டாலராக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19.05 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் இறக்குமதி 11.56 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

 

Categories

Tech |