அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
உலகமே உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் தற்போது அறிவித்து வருகின்றன. மிக குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து அந்த கட்சிகளே வெற்றி பெற்றுள்ள நிலவரத்தை பார்த்திருக்கிறோம்.
தற்போதைய நிலவரப்படி முடிவுகள் வெளிவந்து இருக்கக்கூடிய மாநிலங்களின் அடிப்படையில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் ஜோ பைடன் 129 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 94 வாக்குகளை பெற்றிருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் வாக்குப் பதிவை நிறைவு செய்து தங்களுடைய வெற்றி நிலவரத்தை அறிவித்துவிட்டனர்
அமெரிக்காவை பொருத்தவரை 50 மாநிலங்கள் மற்றும் ஒரு தலைநகரப் பகுதி ஆக 51 பிரதேசங்கள் இருக்கின்றன. 51 பிரதேசங்களில் 538 தேர்தல் சபை வாக்குகள் இருக்கின்றன. இந்த தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளைப் பெறுபவர் தான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.