Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள்… கன மழை கொட்டி தீர்க்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது.

அதனால் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும். அதில் குறிப்பாக இன்று மதுரை, கோவை, சிவகங்கை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |