Categories
தேசிய செய்திகள்

காரில் சென்றால் முகக்கவசம் வேண்டாம்… கர்நாடக அரசு புதிய உத்தரவு…!!!

கர்நாடக மாநிலத்தில் கார் ஓட்டுனர் மட்டும் பயணம் செய்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், பொது மக்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காரில் ஓட்டுனர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை மூடியபடி பயணம் செய்தால் முக கவசம் அணிய தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு மாநகராட்சி, காரின் ஓட்டுனர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை மூடியபடி பயணம் செய்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” வாகனங்களில் பயணம் செய்யும் போது அணிவது பற்றி பெங்களூரு மாநகராட்சியை புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இது கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின் படி முடிவு செய்யப்பட்டுள்ளது. காரில் ஓட்டுனர் மட்டும் பயணம் செய்தால் முக கவசம் தேவையில்லை. ஆனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |